பிரதான செய்திகள்

வவுனியாவில் மஹிந்தவின் வேட்பாளர் மீது தாக்குதல்

வவுனியா நெளுக்குளம்  தமிழ் தெற்கு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனயின் நெளுக்குளம் வேட்பாளர் மீது நேற்று  இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு வவுனியா ,நெளுக்குளம் பகுதியியில் சிறு விபத்து ஒன்று இடம்பெற்றிருந்தது. அந்த விபத்தில் சிறுவனொருவன் சிறு காயத்திற்குள்ளாகியிருந்தான். அவருடன் கதைத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயின் நெளுக்குளம் வேட்பாளரான குகராசா மயூரன் என்பவர் மீது இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிசார் இருவரை கைது செய்தனர். காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்கியவர்கள் என்ன காரணத்திற்காக தாக்கினார்களென நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை மக்களுக்கு உடனடியான உதவிகளை வழங்க தயார்

wpengine

உயர்தர பெறுபேறுகளை வெளியிட தீர்மானம்

wpengine

மட்டக்களப்பு இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

wpengine