பிரதான செய்திகள்

வவுனியாவில் புதுவருட வியாபாரம் பாதிப்பு

புதுவருடத்தை முன்னிட்டு வவுனியாவில் தாம் மேற்கொண்டு வரும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அங்காடி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வியாபாரிகள் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நகரசபைக்கு சொந்தமான இடத்தில் வியாபாரம் செய்து வந்தோம்.
பின்பு துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையம் அமைப்பதற்காக அந்த இடத்தில் இருந்து நாம் வெளியேற்றப்பட்டோம்.

இந்த நிலையில் நகரசபைக்கு முன்பாக நாம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் வீதி ஓரங்களில் புதிதாக வியாபாரம் செய்வதற்கு வேறு நபர்களுக்கு வவுனியா நகரசபை அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் புதுவருட தினத்தை முன்னிட்டு நாம் மேற்கொண்டு வரும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நகரசபை வாக்குறுதி வழங்கியது போல் மிக விரைவாக பழைய இடத்தை செப்பனிட்டு மீண்டும் எமக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பசறையில் விபத்து! 13 பேர் மரணம் 30க்கு மேல் படுகாயம்

wpengine

பொதுநோக்குடையவர்கள் முன்வரவேண்டும் -வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine

கோத்தபாய ராஜபக்ச கடும் கோபமடைந்துள்ளார்! பேஸ்புக் குழுவினை நாடும் கோத்தா

wpengine