பிரதான செய்திகள்

வவுனியாவில் பிரபல ஆடை நிலையம் தீ

வவுனியா – கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வியாபார நிலையத்தின் ஒரு பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், வியாபார நிலையத்தில் உள்ள காற்று சீரமைப்பியில் ஏற்பட்ட மின்னொழுக்கே விபத்து ஏற்பட காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்தவர்களால் வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைந்து செயற்பட்ட தீ அணைப்பு படை தீயை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

எனினும் வியாபார நிலையம் பகுதி அளவில் எரிந்துள்ளது. இதனால் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ள நிலையில், வவுனியா
பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Turkish Parliament Punch-Up (Video)

wpengine

மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதிக்கு எதிராக ஆலயகுருக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

தாஜூடினின் படுகொலை! அநுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு!

wpengine