பிரதான செய்திகள்

வவுனியாவில் பல நோக்கு கூட்டுறவு சங்கம் உடைப்பு! நான்கு பேர் கைது

வவுனியா ஈச்சங்குளம் ப.நோ.கூட்டுறவு சங்க மகா கணபதி கிளையை உடைத்து திருடிச்சென்ற நான்கு நபர்களை கைது செய்துள்ளதாக வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது,

நேற்று இரவு வவுனியா ஈச்சங்குளம் ப.நோ.கூட்டுறவு சங்க மகா கணபதி கிளையின் கதவின் பூட்டினை உடைத்து உட்சென்ற திருடர்கள் அங்கிருந்து உலர் உணவு பொருட்கள், மீள்நிரப்பு அட்டை மற்றும் பணத்தினை எடுத்துக்கொண்டு முச்சக்கர வண்டியில் கல்மடு வீதியின் ஊடாக தப்பித்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்ற முச்சக்கர வண்டியினை காலை 02.00 மணியளவில் கல்மடு கட்டடையர் குளத்தில் ரோந்து கடமையில் இருந்த ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் ஆரியரத்தின, உப பொலிஸ் அத்தியேட்சகர் விஜயரத்தின, பொலிஸ் கெஸ்தாபர்களான லக்ஸ்மன், சந்திரவம்ச, உப்புல், ஆகியோரினால் சந்தேகத்தின் அடிப்படையில் வழிமறித்துள்ளனர்.

இதன்போதே ப.நோ.கூட்டுறவு சங்கத்தில் இருந்து திருடி செல்வது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து வவுனியா, ஒமந்தை பகுதிகளில் வசிக்கும் முச்சக்கர வண்டி சாரதி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது திருடப்பட்ட 100,000 பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையினை ஈச்சங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றது.

Related posts

போராட்டக்காரர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்

wpengine

உயர்தர மாணவன் ஹொலிகொப்டர் தயாரித்து சாதனை

wpengine

பொலிஸாரின் ஏற்பாட்டில் மன்னாரில் மூக்கு கண்ணாடி

wpengine