பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் நூலகம் திறந்து வைப்பு

வவுனியா, சிவபுரம் பகுதியில் இன்றைய தினம் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் குணபாலன் தலைமையில் பொதுநூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது மாணவர்களுக்கான வாசிப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

மேலும் புதிதாக திறந்து வைக்கப்பட்ட பொது நூலகத்தில் ஞாபகார்த்த மரக்கன்று ஒன்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் நாட்டி வைக்கப்பட்டது.

 

இந்நிலையில், குறித்த நிகழ்வின்போது, சிறப்பு அதிதியாக பிரதேச செயலாளர் கா. உதயராஜா கலந்து கொண்டுள்ளதோடு அதிதிகளாக வவுனியா தெற்கு வலய கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம். பி. நட்ராஜ், முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் செக்கட்டிப்புலவு கிராம சேவையாளர் ஜே. அமலதாஸ், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் இணைப்பாளர்கள், அமைச்சர் ரிஷாட் பதியூதினின் இணைப்பாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், மகளிர் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

wpengine

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மே தினக் கோரிக்கைகள்

wpengine

வாட்ஸ் அப்பில் Animated GIFs அனுப்பும் வசதி இணைப்பு

wpengine