பிரதான செய்திகள்

வவுனியாவில் நாளை கடையடைப்பு இல்லை இராஜலிங்கம்

வவுனியாவில் நாளை தினம் கடையடைப்பு போராட்டம் மேற்கொள்வதில்லை என வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் ரி. கே. இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வர்த்தகர் சங்கத்தில் சங்கப்பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா நகரப்பள்ளிவாசலினால் நாளை கடையடைப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு வர்த்தகர் சங்கத்திடம் அனுமதி கோரப்பட்டு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போது நாட்டில் அவரசகாலச் சட்டம் நடைமுறையிலுள்ள காரணத்தினாலும் வவுனியாவில் மூவின மக்களும் செறிந்து வசித்து வருவதையும் கருத்திற்கொண்டு வர்த்தகர் சங்க பிரதிநிதிகளின் இன்றைய கலந்துரையாடலுக்குப் பின்னர் நாளைய தினம் கடையடைப்பு மேற்கொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

2000 கிராம சேவையாளர்கள் பதவி வெற்றிடம்

wpengine

கல்முனையில் இனவாதம் இயலாமையால் வென்றதா..??

wpengine

வக்காளத்து வாங்குவதற்கு தானும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர்! ஹிஸ்புல்லாஹ் மீது ஹக்கீம்

wpengine