பிரதான செய்திகள்

வவுனியாவில் தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய தொண்டராசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கவனயீர்ப்புப் போராட்டம் வவுனியா தெற்கு வலயக் கல்வி பணிமனை முன்பாக சுமார் ஒரு மணிநேரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வட மாகாணசபையினால் ஆசிரியர் நியமனத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ள 182 தொண்டராசிரியர்களின் பெயர்ப்பட்டியலில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், தகுதியானவர்களுக்களின் பெயர்கள் தெரிவுப்பட்டியலில் உள்வாங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்துடன், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொண்டராசியர்களாக கடமையாற்றிய தாம் பல தடவைகள் நேர்முக தேர்வுகளுக்கு சென்றிருந்த போதிலும் புறக்கணிக்கப்பட்டு, அரசியல் செல்வாக்கின் மூலமாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமக்கான நியமனங்கள் நீதியாக வழங்கப்படாத நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள்

wpengine

மக்கா மண்ணில் எனக்கு அளிக்கப்பட்ட கவுரவத்தை கண்டு இங்குள்ள சிலருக்கு வயிற்றெரிச்சல் – மோடி

wpengine

ரணிலின் புதிய தீர்மானம்! பிரதேச சபைகளை நகர சபையுடன் இணைப்பு

wpengine