பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்

வவுனியா, செட்டிகுளம் மயானத்திற்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் இன்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (11) மதியம் வீட்டை விட்டு வெளியில் சென்ற குறித்த நபர் மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை இதனையடுத்து உறவினர்கள் தேடியுள்ளனர். இந்நிலையில் செட்டிகுளம் பொது மயானத்திற்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பொலிஸார் கொலையா..?, தற்கொலையா..? என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செட்டிகுளம், கங்கங்குளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 52) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மகளின் காதலன் வீட்டுக்குள் புகுந்ததால் உலக்கையால் அடித்துக்கொலை .

Maash

இன்று இரவு மஹிந்த அணி தென்கொரியாவில்

wpengine

மதம் மாறிய சினிமாவின் முக்கிய பிரபலங்கள்

wpengine