பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் கைது செய்யப்பட்ட கிராம அலுவலர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியாவில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று கைது செய்யப்பட்ட கிராம அலுவலர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருகையில்,

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் கிராம அலுவலர் பிரிவின் கிராம அலுவலர் தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து கொழும்பிலிருந்து வருகை தந்த லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் குறித்த கிராம அலுவலர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கிராம அலுவலரை மேலதிக விசாரணைக்காக கொழும்பு கொண்டு செல்ல லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், குறித்த கிராம அலுவலர் தமதுக்கு உடல் நிலை சரியில்லை எனவும், நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததையடுத்து குறித்த கிராம அலுவலரை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸாரிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் ஒப்படைத்திருந்தனர்.

இதனையடுத்து நேற்று மாலை குறித்த கிராம அலுவலர் வவுனியா வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளும், வவுனியா பொலிஸாரும் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

எதற்கு பொலிஸ் தினம்! சகீப் சுலைமான் கொலை தொடர்பில் பிரதமர்

wpengine

முசலி பிரதேசத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு

wpengine

ரேசிங் கார் எங்கே? யோஷித என்ன செய்தார்?

wpengine