பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

வவுனியா, குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதைப் பொருடன் நின்ற இரு இளைஞர்கள் வவுனியா பொலிஸாரால் இன்று (13) மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, குடியிருப்பு பகுதியில் நின்ற இரு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் சோதனை செய்த போது அவர்களிடம் இருந்து கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டது.

இதனையடுத்து அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது மோட்டர் சைக்கிள் ஒன்றும் பொலிசாரால் கொண்டு செல்லப்பட்டுனள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வவுனியாவில் உள்ள பிரபல துவிச்சக்கர வண்டி நிலையம் ஒன்றில் கடமையாற்றுபவர் என தெரிவிக்கப்படுகிறது. இந் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

வித்தியா எவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்? சாட்சியம்

wpengine

இலங்கை வரவுள்ள இன்டர்போல்

wpengine

808 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை

wpengine