பிரதான செய்திகள்

வவுனியாவில் கிராம உத்தியோகத்தர்,அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது முறைப்பாடு

வவுனியா பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த கிராம சேவையாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அக் கிராம மக்கள் கடந்த 23ஆம் திகதி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்ழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளரும் சட்டத்தரணியுமான லீனஸ் வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த இரு அரச உத்தியோகத்தர்கள் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிராம மக்களை பிளவுபடுத்தி மக்களை திசை திருப்புவது, பெண்களை அவமரியாதையாக நடத்துதல் அவர்கள் மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தல், பொது நோக்கு மண்டபத்தில் அவர்களுக்கு என அலுவலகம் இருந்தும் வீதியோரங்களில் அலுவலக நேரம் முடிந்த பின்பும் கடமையாற்றுவது, எவ்வளவோ வறிய மக்கள் கிராமத்தில் இருந்தும் அவர்களுக்கு இசைவானவர்களுக்கு மட்டுமே கொடுப்பனவுகளையும் உதவித்திட்டங்களையும் வழங்குவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி இவ் விடயம் தொடர்பாக பிரதேச செயலாளருக்கு பல தடவைகள் சுட்டிக்காட்டிய சமயத்திலும் பிரதேச செயலாளர் போதுமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. நிலவரம் கைமீறி போன சந்தர்ப்பத்தில் வீதியில் கூட்டம் போட்ட சந்தர்ப்பத்தில் (அலுவலக நேரம் முடிந்த பின்னர்) சனசமூக நிலையம் உள்ளது அங்கு கூட்டத்தினை கூட்டுவோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கிராம சேவையாளர் அயலில் உள்ள முஸ்ஸிம் இனத்தவர்களை (கிட்டத்தட்ட 20 நபர்களை ) தொலைபேசியில் அழைத்து பாரிய கலவரத்தினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார் என பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்து மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட மனித உரிமை ஆணைக்குழு அக்கிராமத்தினை மையப்படுத்தும் உளுக்குளம் பொலிஸ் நிலையத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ் விடயங்கள் தொடர்பாக வினவியிருந்தோம்.

இது தொடர்பில் நாளைய தினம்(28) மாலை 3.00 மணிக்கு மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன, குறித்த குற்றச்சாட்டுக்குரிய கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், செட்டிக்குளம் பிரதேச செயலாளர் அவர்களுக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

28.01.2017 இல் “சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும்” ஒன்றிணைத்து, “வேரும் விழுதும்” விழா! (முன்னறிவித்தல்)

wpengine

நாட்டுக்குள் சிக்கலான பல பிரச்சினைகள் எழுந்துள்ளன: மாநாயக்க தேரர்

wpengine

தேசிய வளங்களை விற்பனை செய்வது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை-மஹிந்த

wpengine