பிரதான செய்திகள்

வவுனியாவில் ஊடகவியலாளர் படம் எடுப்பதற்கு மறுக்கப்பட்டது

வவுனியா மாவட்டத்தில் நேற்று  தபால் மூல வாக்குப்பதிவுகள் சீராக இடம்பெற்ற போதிலும் அப்பகுதியில் ஊடகவியலாளர்கள் படம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பெலிஸார் மற்றும் முப்படையினருக்கான தபால் மூல வாக்குப்பதிவுகள் இடம்பெற்றன.

இதன்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான வாக்குப்பதிவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்திலும், பொலிஸாருக்கான வாக்குப்பதிவுகள் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற தபால் மூல வாக்குப்பதிவுகள் குறித்து புகைப்படம் எடுப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மதுஷ்வின் 100கோடி மற்றும் வாகனம் எங்கே?

wpengine

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 15க்கு மேற்பட்டோர் பலி!

Editor

இரானுவ தடைகளை மீறி உணவு பொதிகளை வழங்கிய பாலித

wpengine