வவுனியா மதினா நகர் பகுதியில் அமைந்துள்ள இரு முஸ்ஸிம் கடைகள் நேற்று -30- இரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மதினா நகர் பள்ளிவாசலுக்கு அருகே அமைந்துள்ள முஸ்ஸிம் உணவத்தின் முன்பக்கம் தீயூட்டப்பட்டதுடன் அருகே இருந்த தொலைத்தொடர்பு வர்த்தக நிலையத்தின் விளம்பரப்பலகை, மின்குமிழ் என்பவற்றை இனந்தெரியாத நபர் சேதமாக்கிவிட்டு தப்பித்துசென்றுள்ளனர்.