பிரதான செய்திகள்

வவுனியாவில் ஆர்ப்பாட்டம் நடாத்திய வேலையற்ற பட்டதாரிகள்

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளால் இன்று காலை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் நல்லாட்சி அரசே நாடகமாடாதே, கொடு கொடு வேலையை கொடு, இது வரை காலமும் நாம் ஏமாற்றப்பட்டது போதும் இனியும் ஏமாற தயாரில்லை போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.

அத்துடன், வியாபார நிலையங்களுக்கு சென்ற பட்டதாரிகள், போராட்டத்தின் வடிவத்தை மாற்றுவதற்கான ஆதரவினை தரக்கோரி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.

அந்த துண்டுப்பிரசுரத்தில், எமது போராட்டம் தொடர்ந்து இவ்வாறு செல்வதை நாம் விரும்பவில்லை.
எங்களது போராட்டத்தை வட மாகாண மக்களோடு இணைந்து மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டமாக நடத்தத் தீர்மானித்துள்ளோம்.

எனவே எமது போராட்டத்தில் தாங்களும் பங்குபற்றி எமது தொழில் உரிமைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

 

Related posts

இ.போ.ச.பஸ் கட்டணம் 6 வீதத்தினால் அதிகரிக்க உள்ளது.

wpengine

தேர்தலை புதிய தேர்தல் முறை நடைமுறைச் சாத்தியம் ஆராய வேண்டும்

wpengine

பொது பல சேனாவை கட்டுப்படுத்துங்கள்! அமெரிக்கா வலியுறுத்தல்

wpengine