பிரதான செய்திகள்

வவுனியாவில் 13வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை

வவுனியா – கோதண்ட நொச்சிகுளம் பிரதேசத்தில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக ஈச்சன்குளம் காவற்துறையினர் தெரிவித்தனர்.

சிறுமியின் தாய் கூலி வேலைக்காக வௌியில் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் சிறுமி இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஈச்சன்குளம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் , சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்று வலியினை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது சிறுமி கர்ப்பமுற்றிருப்பது தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் 38 வயதுடைய சிறுமியின் தந்தை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஈச்சன்குளம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

நாம் நாமாக இருப்போம் இளைஞனே!

wpengine

2022ஆம் ஆண்டுக்கான தனது பணிகளை ஆரம்பித்தது மன்னார் மாவட்ட செயலகம்

wpengine

எலும்புத்துண்டுக்கும் எச்சில் சோறுக்கும் எழுதும் வக்கற்ற எழுத்தாளர் சாய்ந்தமருது இக்பால்.

wpengine