பிரதான செய்திகள்

வவுனியா,மன்னாரில் குரங்கின் தொல்லை

வவுனியாவில் பல பகுதிகளில் குரங்கு மற்றும் மர அணிலின் தொல்லைகள் அதிகளவில் காணப்படுகின்றது.

இதனால் வீட்டிலுள்ள கோழிகள் உட்பட ஜீவனோபாயம் அனைத்திற்கும் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனைக் கட்டுப்படுத்த தென்னை பயிர்ச் செய்கை அலுவலகத்தினால் துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்படுகின்றன.

வவுனியாவில் தேங்காய், மாங்காய் போன்றவற்றிற்கு குரங்குகள் பெரும் சேதம் எற்படுத்தி அழிவை ஏற்படுத்தி வருகின்றன.

இதனால் குரங்கின் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கு துப்பாக்கிகள் வழங்கும் நடவடிக்கையினை வவுனியா, மன்னார் பிராந்திய தென்னை பயிர்ச் செய்கை அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.

துப்பாக்கி பெற்றுக்கொள்பவர்களுக்கு பயிற்சிகளும் அறிவுறுத்தல்களும் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

Related posts

வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்.!

Maash

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இன்னுமோர் வங்குரோத்து பிரச்சாரம் -ஹில்மி விசனம்

wpengine

மன்னார் மின்சார சபையின் அசமந்தபோக்கு! மூடக்கப்பட்ட முசலி பிரதேசம்! மக்கள் பாதிப்பு

wpengine