பிரதான செய்திகள்

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டு திறந்து வைப்பு

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சாரணர்களினால் பயணிகள் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு இன்று மாலை நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி விருது செயற்றிட்டமாக குறித்த பயணிகள் நிழல் குடை மாணவர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ளது.

விபுலானந்தா கல்லூரி சாரணர் ஆசிரியர் எஸ்.தற்பரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட சாரணர் ஆணையாளர் எஸ்.உலகநாதன், பாடசாலை அதிபர் பொன்.சிவநாதன், பிரதி அதிபர் ரொசன், விபுல சாரணர்களின் உயர் விருதான பேடன் பவல் விருதினையும்,
ஜனாதிபதி விருதினையும் பெற்றவரும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளருமான சு.காண்டீபன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதரன், கல்லூரியின் ஜனாதிபதி சாரணர்களான வி.சஜீவ்நாத், வ.பிரதீபன், யோ.சதுர்சிகன், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், சாரணர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை மாபெரும் போராட்டங்கள்!!!

Maash

தன்னிச்சையாக செயற்படும் வவுனியா பிரதேச சபை

wpengine

சந்தைக்கு அரிசியை நேரடியாக விநியோகம் செய்ய கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை

wpengine