பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மாணவிக்கு கொரோனா!

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மாணவி ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, பம்பைமடுவில் உள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் கல்வி கற்கும் மாணவிகள் சிலர் கண்டியில் உள்ள தமது வீட்டிற்கு சென்று வந்திருந்த நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவிகளிடம் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மாணவி ஒருவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தவும், குறித்த மாணவியை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

இஸ்லாமிய, தமிழ் இலக்கியப் பொன் விழா

wpengine

20வது திருத்தத்தை கிழக்கு மாகாணசபை ஆதரித்தமையும் விமர்சனங்களும்

wpengine

அமைச்சர் றிசாட் பதியுதீன் யுனெஸ்கோ பிரதிநிகளுடனான சந்திப்பு

wpengine