பிரதான செய்திகள்

வவுனியா வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்கும் வட மாகாண சபை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு நேற்றைய தினத்தை துக்க நாளாக வடமாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களை மதியம் 12.00 மணிவரை மூடுமாறு வர்த்தக சங்கம், வர்த்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

ஆனால் வவுனியா நகரில் பெரும்பாலான கடைகள் திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

வவுனியாவிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மதியம் 12.00 மணிக்கு பின்னர் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வர்த்தக சங்கத்தினர் நேற்று கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நேற்றைய தினம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனாவினால் 49வயதான ஒருவர் மரணம்! வவுனியாவில் அடக்கம்

wpengine

ஏழு முஸ்லிம் எம்.பிக்களுடன் பிரதமர் இன்று அவசர சந்திப்பு!

Editor

இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர்

wpengine