பிரதான செய்திகள்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளரின் பிழையினை சுட்டிக்காட்டிய இளைஞன்! வெகுஜன போராட்டம் விரைவில்

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் முன்பாக வெட்டப்பட்ட மரத்திற்கு முன்பாக மர நடுகை பதாதையை காட்சிப்படுத்திய அதிகாரிகள் அதனை சுட்டிக்காட்டிய இளைஞனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்தமை கண்டிக்கத்தக்க விடயம் என வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஸ்தாபக தலைவரும் தமிழ் மக்கள் பேரவையின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான கி. தேவராசா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் முன்னால் மரநடுகை மாதம் தொடர்பான பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இப்பதாதையானது பிரதேச செயலகத்தினுள் வெட்டப்பட்ட மரத்தின் முன்னால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனை இளைஞர்கள் தமது முகப்புத்தகத்தில் வெளியிட்டிருந்தனர். இதற்கு எதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

இப் பதாதையை கட்டுவதற்கு முன்னர் பிரதேச செயலாளர் தமது புற சூழலை அவதானித்திருக்க வேண்டும்.
இவ்வாறு செயற்படாது வெட்டப்பட்ட மரத்திற்கு முன்பாக பதாதையை காட்சிப்படுத்தியுள்ளமை அவருடைய தவறே தவிர, இதனைச் சுட்டிக்காட்டிய இளைஞர்களினுடை தவறு அல்ல.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஓர் பிரதேசத்தில் அபிவிருத்தி செயற்பாடுகள் இடம்பெறவேண்டும்.

இவ்வாறான நிலையில் தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாது பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்து கொண்டு சிறுபிள்ளைத்தனமாக தனது தவறை மறைக்க இளைஞர்களை பொலிஸிற்கு கொண்டு செல்லும் நிலையை பிரதேச செயலாளர் ஏற்படுத்தியுள்ளார்.

இப் பிரதேச செயலாளர் இப் பிரதேசத்தில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக கடமையாற்றி வருகின்றார்.

எனவே அவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும். அதற்கான முனைப்பினை இப்பிரதேச மக்கள் எதிர்வரும் காலங்களில் வெகுஜன போராட்டங்களின் மூலம் முன்னெடுப்பர் எனவும் தெரிவித்தார்.

Related posts

வடக்கு மக்களுக்காக இனவாதிகளுடன் தனித்து போராடும் றிஷாத்

wpengine

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு 5000ரூபா கொடுப்பனவு வழங்க றிஷாட் கோரிக்கை

wpengine

அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை

wpengine