பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவு மாவட்ட புதிய அரசாங்க அதிபர்! ஏன் மன்னார் அதிபர் இடமாற்றம் செய்யவில்லை

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கே .விமலநாதன் தனது கடமையை இன்றையதினம் (29.02.2020) பொறுப்பேற்றுக்கொண்டார்.


முன்னதாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு தனது குடும்பத்தாருடன் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட அரசாங்க அதிபர் அங்கிருந்து மாவட்ட செயலகம் சென்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.


கடமையை பொறுப்பேற்பதற்காக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு வருகைதந்த அவருக்கு அமோக வரவேற்பளிக்கபட்டது .


மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் காணிப்பகுதி ,பிரதம கணக்காளர் ,உள்ளக கணக்காளர் ,சமுர்த்தி பணிப்பாளர் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கிராம சேவகர்கள் ,பொது மக்கள் அமைப்புகள் என பலர் திரண்டு புதிய அரசாங்க அதிபரை வரவேற்றனர்.


மாவட்ட செயலகத்தை புதிய அரசாங்க அதிபர் வந்தடைந்ததும் முல்லைத்தீவு நகரில் மக்கள் பட்டாசு கொளுத்தி வரவேற்பினை வழங்கியதையும் அவதானிக்க முடிந்தது.

Related posts

சஜித்துக்கு ஆதரவாக கொழும்பு மக்கள் வீதியில்

wpengine

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை மீதான விவாதம்;ஒருநாள் நீடிக்கும்!

Editor

பவித்ரா அமைச்சு பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை

wpengine