பிரதான செய்திகள்

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகங்களினால் நிவாரண ஏற்பாடுகள்

இயற்கை இடரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி வழங்குவதற்கான ஏற்பாடுகள் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டச் செயலகங்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, உதவிப் பொருள்களை வழங்க விரும்புவர்கள் மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு யாழ் மாவட்டச் செயலர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ் மாவட்டச் செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

இடர் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான நிவாரணப் பொருள்கள் சேகரித்தலும், விநியோகித்தலும் பொறிமுறை யாழ்.மாவட்டச் செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரின் பணிப்புக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நன்கொடைகளை வழங்க முன்வரும் நலன் விரும்பிகள், அது தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ள மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ச.ரவியுடன் (தொலைபேசி 0773957894) தொடர்பு கொள்ள முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த வாரத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மேல் மாகாணம், சப்புரகம மாகாணம் போன்றவற்றில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உலருணவுகளை வழங்குமாறு வவுனியா மாவட்ட அரச அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார கேட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:-

நாட்டில் கடந்த வாரத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணங்களில் ஏற்பட்டுள்ள இயற்கை இடரால் மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்களுக்கான உலர் உணவுப்பொருள்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால்மா வகைகள் சேகரிக்கும் பணி வவுனியாவில் நடைபெற்று வருகிறது.

மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் பேன்றவற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியவசியப் பொருள்கள் சேகரிப்பு நடவடிக்கை தற்போது வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்த உலருணவு சேகரிப்பு நடவடிக்கையானது இன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு இடம்பெற உள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உணவு பொருள்களைத் தர விரும்புபவர்கள் விசேடமாக உலர் உணவுப் பொருள்கள், குடிதண்ணீர், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான சுகாதார ஆடைகளை விரைவாக வழங்கி உதவ வேண்டும என்றார்.

Related posts

11வயது மாணவனை தாக்கிய விஞ்ஞான ஆசிரியர்

wpengine

மலேசியாவைச் சேர்ந்த வியக்க வைக்கும் காந்த மனிதர் (வீடியோ)

wpengine

வவுனியா தேவாலயமொன்றிலிருந்து முஸ்லிம் இளைஞர் கைது!

Editor