பிரதான செய்திகள்

வவுனியா பேருந்து நிலையம்! பாராளுமன்றத்தில் பேசிய சார்ள்ஸ்

எமது நாட்டில் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றதால் போக்குவரத்து அமைச்சு இது தொடர்பில் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சட்டங்கள் திருத்தப்படுவதன் மூலம் அந்த சட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்துவது நாட்டில் மிகப்பெரிய சவாலாக உள்ளது. போக்குவரத்து பிரிவு பொலிஸார் போக்குவரத்து சட்டங்களை சரியாக அமுல்படுத்துவதில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு செய்ய முடியாத காரியத்தை முச்சக்கர வண்டி சாரதியொருவர் செய்யுமளவிற்கு, முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் பொலிஸாருக்குமான நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது.

முச்சக்கரவண்டிகளாலும், டிப்பர் வண்டிகளாலும் தான் இந்த நாட்டில் மிகப்பெரிய விபத்துக்கள் இடம்பெறுகின்றன.
அதேநேரத்தில் வவுனியா பேருந்து தரிப்பு நிலையம் பல மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட போதிலும் இன்றும் மக்கள் பாவனைக்கு விட முடியாத ஓர் சூழ்நிலை காணப்படுகிறது.

இதில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் கவனம் குறைவாக உள்ளதா அல்லது தங்களுக்கு போக்குவரத்து சபை கட்டுப்படவில்லையா என்பதில் எனக்கு சந்தேகம் நிலவுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர்,
இங்கு தனியார் பேருந்து சாரதிகளுக்கும், அரசாங்க சாரதிகளுக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகிறது. இதற்கு வர்த்தக சங்கம் ஆதரவை வழங்குகிறது. இதனாலேயே எம்மால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாமல் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ்,முஸ்லிம் உறவுகளை சீர்குலைக்கும் செயற்பாடுகளை யாரும் முன்னேடுக்க வேண்டாம் மன்னாரில் அமைச்சர் றிஷாட்

wpengine

மேதினக் கூட்­டத்­திற்கு வரா­விட்டால் உறுப்புரிமை நீக்கம், பத­வி­கள் பறிப்பு

wpengine

மரிச்சிக்கட்டி மக்களுக்காக போராட்டம் நடாத்திய முல்லைத்தீவு முஸ்லிம்கள்

wpengine