பிரதான செய்திகள்

வவுனியா பேருந்து நிலையத்தின் அவல நிலை ;அரசியல்வாதிகள் எங்கே?


வவுனியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மத்திய போக்குவரத்து அமைச்சரினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையமானது தற்போது விவசாயிகள் நெற்கள் அறுவடை செய்து காயவைக்கும் மைதானமாக மாறிவருவதை அவதானிக்க முடிகின்றது.


புதிய பேருந்து நிலையம் 95 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டது.

பேருந்து நிலையத்தின் பணிகள் சில தினங்கள் இடம்பெற்று பின்னர் அரச, தனியார் பேருந்து சாரதிகளிடையே முரண்பாடு ஏற்பட்டதையடுத்து இ.போ.ச சாலை சாரதிகள் பணிப்பறக்கணிப்பினை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் மட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து மார்ச் 31ஆம் திகதி வரை தற்காலிகமாக புதிய பேருந்து நிலையம் மூடப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.

எனினும் இன்று காலையில் அப்பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை பொதுமக்கள் அப்பகுதியில் காயவைக்கும் பணியினை மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

 

Related posts

பாராளுமன்ற வரவு செலவு அலுவலகத்தை அமைக்க அனுமதி!

Editor

சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மிகவும் கவலையளிக்கிறது

wpengine

எருக்கலம்பிட்டி, முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் பவள விழா

wpengine