பிரதான செய்திகள்

வவுனியா பாடசாலை அதிபரின் பாலியல் சேட்டை! அதிபர் கைது

வவுனியாவில் பாடசாலை மாணவியை பாலியல் ரீதியான சேஷ்டை மேற்கொண்ட பாடசாலை அதிபரை நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகரிற்கு அண்மையில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் அதிபர் ஒருவரே இவ்வாறான மோசமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த மாதம் பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவிகளிடம் பாலியல் ரீதியான சேட்டையில் அதிபர் ஈடுபட்டுள்ளார்.

இவ் விடயத்தை மாணவிகள் பெற்றோரிடம் கூறியதையடுத்து வலயக்கல்வி பணிமனை, மற்றும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவ சமூகம் சார்பாக பெற்றோர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த பாடசாலையின் 53 வயதுடைய அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அதிபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலை அதிபருக்கு எதிராக முன்னரும் இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அம்பாறையில் குழப்பத்தை ஏற்படுத்திய “சிங்க லே“! அமைப்பு

wpengine

அரசியல் மாற்றத்துக்காக சர்வதேச உதவிகளை நாடும் ஜே.வி.பி

wpengine

பாடசாலை அதிபரின் திடீர் இடமாற்றத்தை ரத்துச் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

wpengine