பிரதான செய்திகள்

வவுனியா பள்ளிவாசல் கடை தொகுதி எரிந்து நாசம்! காரணம் வெளியாகவில்லை

வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் நேற்று இரவு எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது.

வவுனியா நகரபள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் 14 கடைகள் காணப்படுகின்றன. அந்த கடைத்தொகுதியில் இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து, தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த கடைப்பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்தே கடைகள் தீப்பித்து எரிந்ததாகவும் அப்பகுதியில் தங்கியிருந்தோர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தீப்பிடித்ததும் அங்கிருந்து இருவர் தப்பியோடியதைக் கண்டதாகவும் வீதியில் பயணித்தோர் தெரிவித்துள்ளனர்.

திட்டமிட்ட ரீதியில் இக்கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இனங்களுக்கு இடையில் வன்முறைகளை தூண்டும் வகையில் இச்செயற்பாடு அமைந்துள்ளதாகவும் வவுனியா பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் வருகைத்தந்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Rishad’s wife writes to the President

wpengine

“பிரதமரை சந்திக்கின்றோம்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட்!!!

wpengine

பிற்பகல் 4 மணியுடன் முடிவடைந்த நாடுபூராவும் பெற்ற வாக்களிப்பு வீதம் !

Maash