பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா சைவப்பிரகாசா ஆரம்ப பாடசாலைக்கு வாத்திய இசைக்கருவிகளை வழங்கிய மஸ்தான் (பா.உ)

(ஊடகப்பிரிவு)
வவுனியா சைவப்பிரகாசா ஆரம்ப பாடசாலைக்கு வன்னி  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு  இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் பாண்ட் வாத்திய இசைக்கருவிகளை (17.03.2017) நேற்று அன்பளிப்பு செய்துள்ளார்.

பாடசாலையின் அதிபர் திருமதி . யோஜராஜா தலைமையில் நடைபெற்ற  சுற்றாடல் சிறுவர்  கழக பதக்கம் சூட்டும் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே அவர் இந்த  வாத்தியக்கருவிகளை  அன்பளிப்பு செய்தார்.

குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்ட  பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் கருத்து தெரிவிக்கையில்,

இந்த பாடசாலையினுடைய பழைய மாணவன் என்ற அடிப்படையில் எனக்கும் சில பொறுப்புக்கள் இருப்பதாக உணர்கின்றேன், இதன் காரணமாக இன்னும் பல சேவைகளை   செய்ய திட்டமிட்டுள்ளேன்.
நான் கல்வி கற்ற காலம் தொடக்கம் இன்றுவரை மும்மதங்களைச்சேர்ந்த மாணவர்களும் இந்த பாடசாலையில் கல்வியைத்தொடர்ந்து  இன்று சமூகத்தில் பல்வேறான உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். அதே போல இங்கிருக்கும் சிறார்களும் எதிர்காலத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

பாடசாலை சமூகமே மாணவர்களின் எதிர்காலத்திற்கு வித்திடுபவர்கள் எனவே இங்குள்ள சிறார்களை ஆசிரியர்களாகிய  நீங்கள் எவ்வாறு செயற்படுத்துகிண்றீர்களோ அவற்றின் பிரதிபலன்களாகேவே அவர்கள் வெளிப்படுவார்கள்.
மேலும் நாம் அரசியலுக்குள் பிரவேசிக்காமல் எமது தந்தையின் அறிவுரைக்கமைய எமது சொந்த பணத்தில்  கல்விக்கான உதவிகளை செய்துவந்தோம் என்றாலும் காலம் எமக்கும் அரசியல் பிரவேசத்தை தந்துவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் அவர்களின் செயலாளர் உட்பட வவுனியா வலயக்கல்விப்பணிமனை உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

அலி சப்ரி,விக்னேஸ்வரன் முன்வரிசை! பலர் விசனம்

wpengine

2025 ஆசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் 120 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற இலங்கை.

Maash

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக 100க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழப்பு .

Maash