பிரதான செய்திகள்

வவுனியா சாரதியின் அசமந்தபோக்கு! வயோதிபர் காயம்

வவுனியாவில் அரச பேருந்தில் ஏறுவதற்கு முன் சாரதி பேருந்தினை செலுத்தியமையினால் வயோதிபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் இது குறித்து அசமந்தமாக செயற்பட்டமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக பொலிஸாரினால் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்குடையிலிருந்து அரச பேருந்தில் ஏறுவதற்கு முற்பட்ட நிலையில் சாரதி பேருந்தினை செலுத்தியுள்ளார்.

இதன் காரணமாக குறித்த வயோதிபர் நிலை தடுமாறி வீதியில் வீழ்ந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வீதியால் சென்று கொண்டிருந்தவர்கள் பேருந்தை தடுத்து நிறுத்தி அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த சாரதியும், நடத்துனரும் வயோதிபரிடம் தாம் பிழையாக நடக்கவில்லை என அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவ இடத்திற்கு வருகை தந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவத்தை கேட்டறிந்த நிலையில், வயோதிபரை குறித்த பேருந்தில் ஏற்றிச் செல்லுமாறு தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாது அங்கிருந்து செல்ல அனுமதித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் செயற்பாட்டை அங்கிருந்தவர்கள் விமர்சித்ததுடன் ,இது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related posts

ஈஸ்டர் தாக்குதலின் 4 வருட பூர்த்தியை நினைவுகூறும் மௌன அஞ்சலிக்கு பேராயர் அழைப்பு!

Editor

சம்மாந்துறை வைத்தியசாலை மு.காவின் முயற்சியினால் தரமுயர்த்தப்பட்டதா?

wpengine

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க இந்த முறை நடவடிக்கை

wpengine