பிரதான செய்திகள்

வவுனியா கல்லூரியில் வாணிவிழா

வவுனியா விபுலானந்தாக் கல்லூரியில் வாணி விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கல்லூரி அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் நேற்று நடைபெற்றள்ளது.

 

இந்து மாமன்றப் பொறுப்பாசிரியர் பிரம்மஸ்ரீ எஸ். சுந்தரசர்மா மற்றும் செயலாளர் வாஹினி நாகரட்ணம் ஆகியோரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மாணவ மாணவிகளின் பல்வேறு வகையான இயல், இசை, நாடக நிகழ்வுகளும் விருந்தினர்களின் உரைகளும் நடைபெற்றுள்ளது.


நிகழ்வில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் கலந்து கொண்டுள்ளார். இந்து மாமன்றத்தினர் ஏற்பாட்டில் ‘நவராத்திரியும் மாணவ மாண்பும்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றியுள்ளார்.
மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டால் வழங்கி வைக்கப்பட்டன.

Related posts

நீண்ட காலமாக சிறையில் வாடும் இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும்- ரிஷாட் வலியுறுத்து

wpengine

பொதுத்தேர்தல் உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல்

wpengine

மன்னாரில் சட்டவிரோதமான முறையில் வெள்ளரிகள்

wpengine