பிரதான செய்திகள்

வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அதிபர் ஒருவருக்கு எதிரான முறைப்பாடு

வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அதிபர் ஒருவருக்கு எதிரான முறைப்பாடு ஒன்றினை மேற்கொள்வதற்குச் சென்ற பிரதேச சபை உறுப்பினரை முறைப்பாட்டினை பதிவு செய்யாமல் பொலிஸார் திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு ஓமந்தைப் பகுதியிலுள்ள பாடசாலை அதிபர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றினை மேற்கொள்வதற்குச் சென்ற வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினரை முறைப்பாடு பதிவு செய்து கொள்ளாமல் பொலிஸார் வெளியேற்றியுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

ஓமந்தை பாடசாலை அதிபர் ஓமந்தைப் பகுதியில் மதுபான நிலையம் அமைப்பதற்கு சம்மதக்கடிதம் வழங்கியுள்ளதாக நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அதிபருக்கு எதிரான கருத்துக்களை தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் முன்வைத்துள்ளார்.

இவ்விடயங்களை அறிந்து கொண்ட அதிபர் நேற்று இரவு பிரதேச சபை உறுப்பினரின் தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தி கடும் தொனியில் பிரதேச சபை உறுப்பினரை எச்சரித்துள்ளார்.

இதையடுத்து இன்று காலை அதிபரால் தனக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தற்காப்பு முறைப்பாடு ஒன்றினை ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து கொள்வதற்காகச் சென்றுள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் பிரதேச சபை உறுப்பினர் மக்கள் பிரதிநிதி, அதிபர் அரச சேவையிலிருப்பவர். எனவே இருவரும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயற்படுமாறு ஆலோசனை வழங்கிய பொலிஸார் முறைப்பாடு மேற்கொள்வதால் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படும் அதிபருக்கு பல முறைப்பாடுகள் காணப்படுகின்றன என்று சமரசம் செய்து பிரதேச சபை உறுப்பினரின் முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் பொலிசாரின் நடவடிக்கையில் அதிருப்தி ஏற்பட்டுள்ள பிரதேச சபை உறுப்பினர் பொலிஸ் நிலையத்திலிருந்து அதிபருக்கு எதிரான முறைப்பாட்டினை மேற்கொள்ளாமல் திரும்பி சென்றுள்ளார்.

Related posts

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானை நிராகரித்த அமைச்சர் ஹக்கீம்,ஹூனைஸ்

wpengine

மீறாவோடையில் இடம்பெற்ற முப்பெரும் விழா

wpengine

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலிருந்து ஊழல் மோசடிகள்

wpengine