பிரதான செய்திகள்

வவுனியா Food City மதுபான விற்பனையில் முதலிடம்

வவுனியா புட் சிட்டி வர்த்தக நிலையம் மதுபானங்கள் விற்பனையில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

வவுனியா கார்கில் புட்சிட்டி விற்பனை நிலையத்தில் பெரிய விற்பனை நிலையமாக இருந்த மருந்து விற்பனை நிலையம் கடந்த சில தினங்களுக்குள் சிறியதாக மாற்றம் பெற்றுள்ளதுடன் சிறிய விற்பனை நிலையமாக இருந்த மதுபான விற்பனை நிலையம் பெரியதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வவுனியா நகரில் திறந்து வைக்கப்பட்ட கார்கில் புட்சிட்டி விற்பனை நிலையத்தில் அன்றிலிருந்து விசாலமாக காட்சியளித்த மருந்துகள் விற்பனை நிலையம் கடந்த சில தினங்களாக சிறியதாகிய நிலையிலும் சிறியதாக இருந்த மதுபான விற்பனை நிலையம் வாடிக்கையாளர்களின் பார்வைபடும் படியாக தற்போது பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த கார்கில் புட்சிட்டி நிலையத்தின் முகாமையாளரிடம் இது குறித்து வினவிய போது,
மருந்தகத்தில் விற்பனைகள் குறைவடைந்துள்ளதையடுத்து சிறியதாக இருந்த மதுபான விற்பனை நிலையத்தில் விற்பனையும் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ள காரணத்தினால் சிறியதாக இருந்த மதுபான விற்பனை நிலையத்தை பெரியதாக மாற்றியதுடன் பெரியதாக இருந்த மருந்தகத்தினை முன்னர் மதுபானம் அமைந்துள்ள சிறிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சித்திரைப் புதுவருடத்தினை முன்னிட்டு மதுபானங்களின் விற்பனையினை அதிகரிக்கும் நோக்கில் இது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது மருந்தகம் அமைக்கப்பட்ட பகுதியானது வெயில் படும் இடமாகவும் வெப்ப நிலை அதிகம்காணப்படும் கண்ணாடியுடன் முன்பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிறுவர்களை கார்கில் புட்சிட்டிக்கு அழைத்துச் செல்லும் போது மதுபானங்கள் அவர்களின் பார்வைக்கு தெளிவாக காட்சியளிக்கின்றமையும் அங்கு செல்லும் பெண்கள் உட்பட அனைவரையும் இச் செயற்பாடானது சிரமத்திற்குட்படுததுவதாகவும் கார்கில் புட்சிட்டிக்குச் சென்று வரும் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Related posts

“ஜெர்மனியில் நம்முடன் வாழும் முஸ்லிம்கள் நம் நாட்டை சேர்ந்தவர்கள் அமைச்சர்

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழுவில் 24 ஆம் திகதிக்கு பிறகு முறைப்பாடு செய்ய முடியாது.

wpengine

அஷ்ரப் மரணித்து 18வருடங்கள் அவரது நோக்கத்தை அடைந்திருக்கின்றோமா?

wpengine