பிரதான செய்திகள்

வவுணதீவு பிரதேச செயலக வருடாந்த கலாச்சார விழா

மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலகமும், மண்முனை மேற்கு கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடத்திய வருடாந்த கலைஞர்கள் கலாச்சார விழா வவுணதீவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

 

இந்த நிகழ்வில் மண்முனை மேற்கைச் சேர்ந்த, பாரம்பரிய வைத்தியத் துறைகளிலும் கலைத்துறைகளிலும் பாண்டித்தியம் பெற்ற 8 கலைஞர்கள் பொன்னாடை அணிவித்து சான்றிதழ்களும், நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, பாடசாலை மாணவர்களின் கலை கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் தமிழ் மொழி வாழ்த்து, வரவேற்பு நடனம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளது.

Related posts

வவுனியா வடக்கு பிரதேச செயலாளரின் பிழையினை சுட்டிக்காட்டிய இளைஞன்! வெகுஜன போராட்டம் விரைவில்

wpengine

டீ விற்பவராக வாழ்க்கையை தொடங்கிய மோடி ! அசாமில் சோனியா கடும் ஆவேசம்

wpengine

தேசிய வடிவமைப்பு நிலையத்தின் தவிசாளர் நியமனம்

wpengine