பிரதான செய்திகள்

வறிய குடும்பங்களை சேர்ந்த ஒருவருக்கு தொழில்வாய்ப்பு

நாட்டிலுள்ள வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.


அதற்கமைய வறிய குடும்பங்களை சேர்ந்த ஒருவருக்கு தொழில்வாய்ப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தொழில் வழங்குவதற்கு அவர்களின் தகைமைகள் ஆராயப்படாது எனவும், அவர்களிடம் உள்ள தகைமைக்கு அமைய, வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் எனவும் சரத் அமுனுகம குறிப்பிட்டார்.

வறிய குடும்பங்களுக்கு குறைந்தது மாதம் 25 ஆயிரம் ரூபாவை இதன் மூலம் வருமானமாக பெறக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது

wpengine

வடக்கு அபிவிருத்தி அமைச்சு டி.எம்.சுவாமிநாதனிடம்

wpengine

முஸ்லிம் அரசியல்வாதிகளை இல்லாதொழித்தே முடிவுக்கு வரும் அனுரகுமார

wpengine