பிரதான செய்திகள்

வர்த்தக அமைச்சருடன் மந்திர ஆலோசனை நடாத்திய ரணில்

இலங்கையின் அரசியல் நிலைமைகள் குறித்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய வர்த்தகத்துறை அமைச்சர் க்ரேக் ஹேன்ட்ஸ்ஸுடன் கலந்துரையாடியுள்ளார்.

தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் அண்மையில் பிரித்தானியாவுக்கு சென்றிருந்தார்
இதன்போது அவர் பிரித்தானிய வர்த்தகத்துறை அமைச்சர் க்ரேக் ஹேன்ட்ஸ்ஸை சந்தித்து, இலங்கையின் அரசியல் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தமது நாடு எதிர்பார்ப்பதாக பிரித்தானிய வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ளூர் பாலங்கள் மற்றும் வைத்தியசாலை போன்ற துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள பிரித்தானியா எதிர்பார்ப்பதாக அந்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மரண அறிவித்தல்

wpengine

அரசியலமைப்பை மாற்றியமைக்க சந்தர்ப்பமளிக்க மாட்டோம்!மெகொட அபேதிஸ்ஸ தேரர்

wpengine

முஸ்லிம், தமிழ் சமூக உறவை சீரழிக்க நினைக்கின்ற கருணா- ஹாபீஸ் நசீர்

wpengine