பிரதான செய்திகள்

வருட இறுதிக்குள் மாகாண சபை தேர்தலை நடாத்த அரசு தீர்மானித்துள்ளது.

ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை இந்த வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவாலும், எதிர்க்கட்சிகளாலும் விடுக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் மற்றும் நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்திகள் காரணமாக வருட இறுதிக்குள் 6 மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசு ஆலோசித்துள்ளது.

சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாண சபைகளுக்கான ஆயுட்காலம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்திருந்தது.

இதேவேளை, வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

குறித்த 6 மாகாணங்களுக்குமான தேர்தலை பழைய விகிதாசார முறையில் நடத்த அரசு தீர்மானித்துள்ளது.

அது தொடர்பில் அரசின் பங்காளிக் கட்சிகளுடனும், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சித் தலைவர்களுடனும் விரைவில் பேச்சுகளை நடத்த அரசு தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது.

Related posts

உற்பத்தியினை ஊக்குவிக்க நடவடிக்கை வேண்டும் பொது கூட்டத்தில் அமைச்சர் றிஷாட்

wpengine

டலஸ் , உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன மற்றும் விமல் உள்ளிட்டவர்களுக்கு தடை

wpengine

பஸ் கட்டணங்கள் குறையும் சாத்தியம்!

Editor