பிரதான செய்திகள்

வரி அதிகரிப்பு ஆட்டோவின் விலை மாற்றம்

வட் வரி அதிகரிப்பை அடுத்து, முச்சக்கர வண்டிகள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால், முச்சக்கரவண்டிக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதென அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்தது.

இந்த புதிய வரி அதிகரிப்பு தொடர்பில், முச்சக்கரவண்டி இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலொன்று, இன்று இடம்பெற்றதாக மேற்படி சங்கத்தின் தலைவர் ஜீ.சுதில் ஜயருக் தெரிவித்தார்.

முச்சக்கரவண்டித் துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில், எதிர்வரும் வாரத்தில் தீர்க்கமானதொரு தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

77 ஆவது சுதந்திரதின நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது!!!

Maash

புதிய உள்ளுராட்சி தேர்தல் முறை ஒரு பார்வை

wpengine

ஹிஸ்புல்லாஹ்வின் பொய்யினை விசாரணை செய்யுங்கள்! ஷிப்லி கடிதம்

wpengine