செய்திகள்பிரதான செய்திகள்

வரலாற்றில் முதல் முறையாக..! முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி விதிக்கப்படும்.

முட்டைகளுக்கு வற் வரி விதிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி விதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,

முட்டைகளுக்கு வற் வரி நடைமுறைப்படுத்தப்பட்டாலும் முட்டைகளின் விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது.

வரலாற்றில் முட்டைகளுக்கு வற் வரி நடைமுறைப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

முட்டைகள் மீது வற் வரியை விதிப்பது நியாயமற்றது. முட்டைத் தொழிலின் வீழ்ச்சிக்கு இது வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்; சத்தியப்பிரமாண நிகழ்வில் ஆணையாளர்.

wpengine

41 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு

wpengine

பல கோடி ரூபா பெறுமதியான நீல நிற இரத்தினக்கல்

wpengine