வயல்வெளியில் வீசப்பட்ட சிசு – ஜெர்மன் தம்பதியால் தத்தெடுக்கப்பட்டது! கடந்த வாரம், குருநாகல் மாவட்டத்தின் பரகஹதெனிய பகுதியில் அமைந்துள்ள சிங்கபுர வீதியை ஒட்டிய வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தை தற்போது பாதுகாப்பாகவும் நலமுடன் இருக்கிறது.
அந்த சிசு, மருத்துவமனையில் தாதியர்களின் அன்பான பராமரிப்பிலும் மருத்துவர்களின் முழுமையான கவனிப்பிலும் வளர்ந்துவருகிறது. இச்சம்பவம் ஊடகங்களில் வெளிவந்ததைத் தொடர்ந்து, இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட தத்தெடுப்பு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜெர்மனியைச் சேர்ந்த கருணைமிக்க தம்பதி ஒருவர், இச்சிசுவை தத்தெடுத்து வளர்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பம் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டு, தத்தெடுப்பு சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
