செய்திகள்பிரதான செய்திகள்

வயதானவர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து கடிக்கும் குரங்கு கூட்டம், 6 பேர் படுகாயம்.

மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனை பகுதிக்குள் உள்நுழைந்த குரங்கு கூட்டம் பெண்கள் மீது கடித்ததில் ஒரே வாரத்தில் 6 பேர் படுகாய மடைந்துள்ளனர்.

வந்தாறுமூலை வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் பயிர்களை அழித்து சேதமாக்கி வருவதுடன் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது பீதியில் அச்சத்துடன் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர் .

வீட்டை விட்டு வெளியில் வந்த வயதான பெண் ஒருவர் மீது குரங்கு கடித்ததை அடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார் . குரங்கு கடித்து குதறியதில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவர்கள் அனைவரும் பெண்கள் இருந்தபோதும் கடந்த சில வாரங்களாக குடிமனை பகுதிக்குள் உள்நுழைந்த குரங்கு கூட்டம் வீட்டின் கூரைகளை உடைத்து சேதமாக்கி வருவதுடன் மாமரம் பலா மரம் போன்ற பயன் தரும் மரங்களின் பழங்கள் காய்களை பிடுங்கி அழித்து வருகிறது.

இதன்போது வெளியே வரும் வயதான பெண்களை குறிவைத்து அவர்களை கடித்ததில் அவர்கள் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts

மின்கட்டணத்தை 33% அல்லது அதற்கு மேல் அதிகரிக்க முன்மொழிவு .

Maash

அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் அவசர வேண்டுக்கோள்!

wpengine

ஹெரோயின் கடத்தியவருக்கு 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கிய நீதிபதி மா.இளஞ்செழியன்!

Editor