பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் காட்டிக்கொடுப்பு

(முசலியூர்.கே.சி,எம்.அஸ்ஹர்)

வன்னிமாவட்ட  சிறிலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு,காதர் மஸ்தான் அவர்கள் தனக்கு வாக்களித்த சிறுபான்மை இன மக்களான முஸ்லிம்களையும்,தமிழர்களையும் காட்டிக் கொடுத்துள்ளார்.புதிதாக பாராளுமன்ற உறுப்பினரானவர் என்பது இவரின் முதிர்ச்சியற்ற அரசியல் செயற்பாட்டின் மூலம் வெளிக்காட்டப் பட்டுள்ளது.

எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாப் பிரேரனைக்கு இவர் ஆதரவாக கையெழுத்திட்டுள்ளார்.இவரின் செயல்”ஆடு உறவு அதன் குட்டி பகை “என்பது போல உள்ளது.உருப்படியாக இவரால் வன்னியில் செய்யப்பட்ட அபிவிருத்தியை அல்லது காணிவிடுவிப்பு,தொழில்வாய்ப்பு எவற்றையாவது காட்டமுடியுமா ?

ஏன் எதற்காக எனக்கெதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு எதிராக கையெழுத்திட்டீர்? எனக் கேட்க.பதிலாக வன்னியில் ஒன்றும் என்னால் செய்யமுடியாதுள்ளது.யாவும் றிசாத் மயம் அதற்காகத்தான் கையெழுத்துப் போட்டேன் எனக்கூறியுள்ளார்,இது 2018 இன் காலாண்டின் சிறந்த நகைச்சுவை, எதிரிக்குச் சகுனப்பிளை ஏற்பட வேண்டும் என்பதற்காக தனது மூக்கை அறுத்துக் கொண்ட கதைபோலுள்ளது.

ஆடத்தெரியாதவள் அரங்கு பிழையென்றாளாம்.அபிவிருதீதிக் குழுவின் இணைத்தலைவர் இப்படிக் கூறுவதா ?வாக்காளரிடமிருந்து தப்புவதற்காக வன்னியமைச்சர் விடுகிறாறில்லை என்ற பிரசாரத்தை மேற்கொள்வது புலனாகிறது.தமிழ்க்கட்சிகள்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,சி.மு.கா என்பன பிரதமருடன் நிற்கும் போது இவருக்கு என்ன வந்தது.பாம்புக்குத்தலை மீனுக்கு வாலைக்காட்டாமல் தான் மகிந்த அணியா அல்லது மைத்திரி அணியா என உடன் வெளிக்காட்ட வேண்டும்.

Related posts

ஜனவரியில் தேர்தல்! வர்த்தகமானி அறிவித்தல்

wpengine

வவுனியாவில் 21 வயது இளைஞரின் சடலம் மீட்பு!

Editor

சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதியாளர்களின் நன்மை கருதி மசாலா பொருட்களுக்கு புதிய இணையத்தளம் அறிமுகம்!

Editor