பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி தொகுதியில் சஜித் அணியில் றிஷாட், ஹக்கீம் இணைந்து போட்டி

வன்னி தேர்தல் தொகுதியில் சஜித் தலைமையிலான தொலைபேசி சின்னத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிடவுள்ளதாக அறியமுடிகின்றன.


இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்னி மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் போட்டியிடவுள்ளார்கள்.


ஐக்கிய தேசிய கட்சி சார்பாக இரண்டு சிங்கள வேட்பாளர்கள், முஸ்லிம்கள் சார்பாக இரண்டு வேட்பாளர்கள் இதுவரை கையொப்பம் ஈட்டுள்ளார்கள் ஏனைய ஐந்து வேட்பாளர்களையும் இரண்டு கட்சிகளும் இணைந்து தீர்மானிக்கவுள்ளதாகவும் அறியமுடிகின்றன.


இதற்கான வேட்புமனுவை நாளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறியமுடிகின்றன. 

Related posts

முசலி பிரதேசத்தில் 50வீடுகள்! முதல் கட்டம் 11வீடுகள்

wpengine

உள்ளூராட்சித் தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி..!

Maash

இலங்கை – சீனா நட்புறவுச் சங்கத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சீனா பயணம்!

Editor