பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி தேர்தல் தொகுதியில் சைவ சமய மதவாத ரீதியான சுவரொட்டிகள்

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வன்னி தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் சைவ சமய மதவாத ரீதியான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


சிவ சேனை என்ற அமைப்பு இந்த சுவரொட்டிகளுக்கு உரிமை கோரியுள்ளது.


தமிழ் தேசியம் காக்க சைவ வேட்பாளருக்கு வாக்களிப்பீர் சைவ மக்களே” எனவும் அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


குறித்த சுவரொட்டிகளால் தமிழ் மக்கள் மத்தியில் மத ரீதியான பிரிவினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

மஹிந்தவை தண்டிப்பது இப்படியல்ல…

wpengine

ஹக்கீம்,றிஷாட் பதியுதீன் இணைந்து புதிய கூட்டணி அமைக்க நடவடிக்கை

wpengine

பல பிரபலமிக்க உலமாக்களை உருவாக்குவதற்கு பாடுபட்ட தீனுல் ஹஸன் மௌலவியின் ஆரோக்கியத்திற்கு துஆ செய்யவும்.

wpengine