தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

“வட்ஆப்“ பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி ஊட்டும் தகவல்

டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் சில வகை கையடக்க தொலைபேசிகளுக்குவாட்ஸ்அப் சேவை கிடைக்காது என வாட்ஸ்அப் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாகஅறிவித்துள்ளது.

அதற்கமைய,சிம்பியன் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட தொலைபேசிகள், பிளாக்பெரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெரி 10,நோக்கியா எஸ் 40,நோக்கியா எஸ் 60,ஆன்டிரொய்ட்வெர்சன் 2.1 மற்றும் 2.2,வின்டோஸ் போன் 7.1,ஆப்பிள் ஐபோன் 3 ஜிஎஸ், ஐஓஎஸ் 6ஆகிய தொலைபேசிகளில் தான் வாட்ஸ்அப் சேவை டிசம்பர் 31க்கு பிறகு கிடைக்காது.

“இந்த வகை தொலைபேசிகள் எங்களுக்கு முக்கியம் என்றாலும், எதிர்கால சேவைக்குஇந்த வகை தொலைபேசிகளில் தொழில்நுட்ப வசதியில்லை.

அதனால் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது. எனவே,தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் தொடர்பு கொள்ள வேறுதொலைபேசி வகையிற்கு மாறுங்கள்.

அப்போதுதான் இந்த சேவையை தொடர்ந்து பெற முடியும்” என்று தனது இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கபீர் ஹாசீம் அமைச்சுப் பதவி குறித்து அதிருப்தி!

wpengine

வன்னி தொகுதியில் சஜித் அணியில் றிஷாட், ஹக்கீம் இணைந்து போட்டி

wpengine

பிர்தௌஸ் பாடசாலை உள்ளக வீதி

wpengine