பிரதான செய்திகள்

வடமாகாணத்திலிருந்து புத்தளம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான வேண்டுகோள்

எம்.எஸ்.எம் ஆஸிப்

தற்போது நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக தங்களது வருமானங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு அரசினால் வழங்கப்படும் ரூபா 5000 கொடுப்பனவில் வடக்கிலிருந்து 1990 ஆண்டில் வெளியேற்றப்பட்டு புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்துவரும் குறித்த கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியான சுமார் 5000 குடும்பங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு “covid19 தடுப்புக்கான ஜனாதிபதியின் செயலணிக்கு”, “புத்தளம் மாவட்ட செயலகம்” என்பவற்றிற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக மன்னார் மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் ஊடாக கிராம உத்தியோகத்தகர்கள் மூலம் குறித்த கிராம உத்தியோகத்தகர்கள் பிரிவில் பதிவு செய்யப்பட்டு தற்போது புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களின் தகவல்களை வழங்குமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,

எனவே தங்களது வாக்குப்பதிவுகள் காணப்படும் கிராம உத்தியோத்தகர்களை தொடர்பு கொண்டு தங்களது குடும்பங்களும் குறித்த தகவல் திரட்டில் உள்வாங்கப்பட்டுள்ளதா என உறுத்திப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

S.H.அப்துல் மதீன்
தலைவர்
வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் பேரவை (NDPF)

Related posts

முஸ்லிம்களுக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகள்

wpengine

வவுனியா மாவட்ட செயலகத்தில் முற்றுகை

wpengine

கண்டியில் 885 கோடி சேதம் பிரதேச செயலாளர்

wpengine