பிரதான செய்திகள்

வடமாகாண கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கூட்டம் – பா.டெனிஸ்வரன்

வடமாகாண மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் நேற்று  24.06.2016  காலை 10 மணியளவில் யாழ் குருநகரில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி திணைக்கள கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

இக்கூட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர் A.பரஞ்சோதி, அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் J.J.பெலிசியன், அமைச்சின் கணக்காளர் திருமதி அனந்த கிருஷ்ணன் மற்றும் 5 மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

0f152605-8f92-4e4d-b362-1ca5b2ac6b18

மாலை 7மணிவரை நடைபெற்ற இவ் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில், கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் செயற்பாடுகள் மற்றும் திணைக்களம், அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலை மற்றும் செயற்பாடுகள் என்பவையும் முன்னாள் போராளிகளுக்காக வழங்கப்பட்ட வாழ்வாதார திட்டத்தின் முன்னேற்ற நிலைமைகள் மற்றும் அவர்களுக்குள்ள சவால்கள் என்பன விசேடமாக ஆராயப்பட்டன. ffbed274-b804-4716-a86a-b3d542c95ba6

Related posts

கரடியுடன் செல்பி பரிதாபமாக உயிரிழந்தார்.

wpengine

தேசிய கீதத்திற்கு மரியாதை வழங்காமல் பௌத்த மதகுரு செயற்பட்டார்.

wpengine

சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மிகவும் கவலையளிக்கிறது

wpengine