பிரதான செய்திகள்

வடமாகாண கல்வி அமைச்சராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமனம்

வடக்கு மாகாணத்தின் புதிய கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறை அமைச்சராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை யாழ்.நகரில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி காரியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தலைமையில் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், ஈ.சரவணபவன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் 15 பேர்களுக்குமிடையில் புதிய கல்வி அமைச்சர் நியமனம் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

வடக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராசா தனது பதவியை இராஜினாமா செய்ததனைத் தொடர்ந்து அந்த வெற்றிடத்திற்கு வடமாகாண விளையாட்டு அமைச்சின் இணைப்பாளராக இதுவரை காலமும் பணியாற்றிய இம்மானுவேல் ஆனோல்டை கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்பினர் பா.அரியரட்ணம் அவர்கள் முன்மொழிய தமிழரசுக் கட்சியின் ஏனைய மாகாண சபை உறுப்பினர்கள் ஏக மனதாக ஏற்றுக்கொண்டார்கள்.

அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் எதிரொலியாகவே இன்று தமிழரசுக் கட்சி புதிய கல்வி அமைச்சரை நியமித்துள்ளது.

மேலும் விவசாய அமைச்சரை நியமிக்கும் பொறுப்பும் அதன் அதிகாரமும் வடக்கு முதலமைச்சரின் கரங்களிலே இருப்பதாக மாகாண சபைத் செய்திகள் தெரிவிக்கின்றன

Related posts

கொள்வனவு செய்யப்பட்ட நெல்லினை சந்தைப்படுத்துவதற்கு தீர்மானம்

wpengine

விக்னேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவில் துண்டுப்பிரசுரங்கள்

wpengine

பெண்கள் பிரதிநிதித்துவம் பாரிய பிரச்சினை! மைத்திரி

wpengine