பிரதான செய்திகள்

வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரனின் அனுதாபச் செய்தி

எமது நாட்டில் ஏற்ப்பட்ட சீரற்ற காலநிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வெள்ளத்தினால் பல பெறுமதியுள்ள உயிர்களையும், உடமைகளையும் இழந்து சொல்லமுடியாத துயரத்தை சந்தித்து மிகவும் வேதனையோடு இருக்கும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன் அவர்கள் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

அதே வேளை அவர்களுக்கான சகல உடனடி தேவைகளையும் பூர்த்தி செய்யுமாறு சகல அரச அரச சார்பற்ற அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கிய மேன்மை தாங்கிய ஜனாதிபதி அவர்களது பணிப்புரையை ஏற்றுக்கொண்டு, தம்முடைய நேரத்தை பொருட்படுத்தாது உணர்வோடு பணியாற்றும் சகல அதிகாரிகள் ஊழியர்கள், அரச சார்பற்ற தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் எமது நாட்டின் திடீர் இழப்புக்களில் தம்முடைய உதவிக்கரங்களை நீட்டி உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நேச நாடுகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

அம்பாரை முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது தாக்குதல்! வாய்மூடிய நல்லாட்சி அரசு

wpengine

அரசாங்கம் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது! அதில் கருணா,உலகக்கிண்ணம் என பல

wpengine

விண்வெளியில் நேரடி ஒளிபரப்பை மேற்கொண்ட பேஸ்புக்

wpengine