பிரதான செய்திகள்

வடக்கு,கிழக்கில் 50ஆயிரம்! கேள்வி மனு கோரல்

வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்துக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் கேள்வி மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன.

நவம்பர் மாதம் 13 ஆம் திகதி குறித்த கேள்விமனுக்கள் திறக்கப்பட உள்ளதாக தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி எமது செய்திச்சேவையிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, திட்டம் குறித்தான மதிப்பீடுகளை மேற்கொண்டு திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் தெரிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த திட்டத்தில் குறித்த வீடுகள் மக்களுக்கு இலவசமாக கையளிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தாரர்.

இந்த வீட்டுத் திட்டத்துக்காக இந்தியா மற்றும் சீன நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இதேவேளை, வடக்கு, கிழக்கில் பாதைகள் மற்றும் பாதைகளை நிர்மாணிப்பது தொடர்பான கேள்விப்பத்திரங்களை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

Related posts

மன்னார் மடுவில் மரகடத்தல் வியாபாரம்

wpengine

கரம்பிடித்த கனவனையே அநியாயமாக கொலை செய்த மனைவி!

Editor

EPF-ETF மனு விசாரணையின்றி நிராகரிப்பு!

Editor