பிரதான செய்திகள்

வடக்கு, கிழக்கு இணைப்பினை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் எதிர்க்கவில்லை- பாரூக்

சர்வதேச விசாரணையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் எதிர்க்கவில்லை, ஆனால், தலைமைகள் வெளிப்படையாக தெரிவிக்க தயங்குகின்றார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.பி.பாரூக் இன்று  யாழ். ஊடக மையத்தில் தெரிவித்தார்.

அதே வேளை, வடக்கு கிழக்கு இணைப்பினை ஏற்றுக்கொள்ளுமா? என்றும், முஸ்லிம் மக்களுக்கு விரோதமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் செயற்படுவதாக ரிஷாட் பதியூதீன் குற்றஞ்சாட்டுகிறார். அவ்வாறு ரவூப் ஹக்கீம் செயற்படுகின்றாரா? என்று ஊடகவியலாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த அவர்,

வடக்கு, கிழக்கு இணைப்பினை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் எதிர்க்கவில்லை. அவ்வாறு இணைக்கப்படும் பட்சத்தில் முஸ்லிம்களுக்கான அலகு ஒன்று அவசியமென்பதனை குறிப்பிட்டுள்ளோம்.

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில், பொதுவான நிகழ்ச்சிகளில் புள்ளிகளைப் பெறுவதற்காக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுவது வழமையாக இருக்கின்றது.

இவ்வாறு அமைச்சர் ரிஷாத் பதியூதீன் பொது மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைவதற்காக இவ்வாறு கூறுவது வழமையாக நடைபெற்று வருகின்றது.

வடகிழக்கு மாகாண மீள்குடியேற்ற செயலணி குறித்து பாரிய சர்ச்சை எழுந்துள்ளது. வடக்கு, கிழக்கு என தனியான மாகாண சபைகளின் ஊடாக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு மாகாணங்களுக்கான மீள்குடியேற்ற செயலணியில் உள்ளடக்கப்படுகின்ற உறுப்பினர்கள் எமது பிரதேசத்தினை, எமது மாகாணத்தினைக் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

எமது மாகாண பிரச்சினைகளை, எமது வீட்டுப் பிரச்சினைகளை நாங்களே பார்க்க வேண்டும். வேறு மாகாணத்தில் இருப்பவர்களை இறக்குமதி செய்து எமது பிரச்சினைகளை பார்ப்பதற்கு அனுமதிக்க முடியாது என்றார்.

Related posts

பேஸ்புக் தொடர்பில் வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் 1100 முறைப்பாடுகள்

wpengine

இன்று மோடியினை சந்தித்த காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா

wpengine

51,000 பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் நிரந்தர நியமனம்- அமைச்சர் தினேஷ்

wpengine