பிரதான செய்திகள்

வடக்கு கிழக்கில் சேதமடைந்த விகாரைகள் சமய தலங்களை புனரமைக்க நடவடிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான விகாரைகள் மற்றும் சமயஸ்தலங்களை மறுசீரமைப்பு செய்யும் பொறுப்பை  விகாரைகள் மற்றும் சமயஸ்தலங்களின் முகாமைத்துவ பரிபாலன சபைகளுக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக  இந்த தகவலை வெளியிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான விகாரைகள் மற்றும் சமயஸ்தலங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு குறித்த விகாரைகள் மற்றும் சமயஸ்தலங்களின் முகாமைத்துவ பராமரிப்பு சபைகளுக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில்  சம்மந்தப்பட்ட மாவட்டங்களின் செயலாளர்களின் மற்றும் பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான விகாரைகள் மற்றும் சமயஸ்தலங்களை துரித கதியில் புனரமைப்பு செய்ய குறித்த விகாரைகள் மற்றும் சமயஸ்தலங்களின் முகாமைத்துவ பராமரிப்பு சபைகளுக்கு வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.  இது தொடர்பில்  தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

Related posts

இஸ்லாத்தைத் தழுவிய சுஷ்மா சுவராஜ்

wpengine

வவுனியாவில் ஆர்ப்பாட்டம் நடாத்திய வேலையற்ற பட்டதாரிகள்

wpengine

குமாரியின் வாக்கு மூலம்! மாட்டிக்கொண்ட காதல் மன்னன் ரவூப் ஹக்கீம்

wpengine